Posts

Image
ஒரே வயிற்றில் பிறந்து ஒரே உணவை பகிர்ந்துண்டு..... சின்னஞ்சிறு கோபங்கள் கொண்டு செல்லச்சண்டைகளிட்டு ஒருவருக்கொருவர் அன்பைப் பொழிந்து.... கடந்துபோன காலங்கள் திரும்ப கிடைக்கப்பெறுமா??.... காலங்கள் மாறிதான் போயினவே உனக்கென உரிமை கொண்டாட ஒரு சொந்தம் வந்ததே..... என் கரம்பற்றி வழிநடத்தியவளை மற்றொருவர் கரங்களில் கொடுக்கையில் குளமாகின கண்கள்.... தம்பியாய் பிறந்தவன் தந்தையாய்  உணர்ந்த நேரமது.... காத்திருக்கிறேன் உன் பிள்ளை கரம் பற்றி வழிநடத்த என் தங்கத்தின் தாய்மாமானாக.....
Image
விதியின் சாபம் என்னவன் நீ என நினைத்திருந்தேன்.... அனுதினமும் உனக்காய் காத்திருந்தேன்.... விதியின் சாபமோ..... சதியின் கோபமோ.... நீயின்றி என்னருகில் வேறொருவன்.... மறக்க நினைத்தவனை கண்முன்னே காணவைத்த கோலமென்ன???... உயிரற்று போனவளை உயிர்கொள்ள செய்திடவா???... பலனற்று போன காதல் மண்ணுள்ளே புதைந்ததே! 
Image
மகனதிகாரம் ஊரெல்லாம் சொல்லி வந்தேன் சிங்கக்குட்டி பிறந்திருக்கிறான் என் நீ பூமிக்கு வந்த நிமிடம்...... சுட்டெரிக்கும் சூரியனை எட்டிப்பிடித்த மகிழ்ச்சியை உணர்ந்தேன் உன்னை என் கையில் ஏந்திய தருணம்...... அந்த வான்விரித்தச் சிறகையும் வாரிக்கொண்டு வருவேன் உனக்கு ஆடையாய்த் தைத்திட...... எழில் கொஞ்சும் வெண்மதியையும் சிறைப்பிடுத்துக் கொண்டு வருவேன் நீ பந்தாடிட...... உன் முகத்தில் வளர்ந்த அரும்பு மீசை காட்டிக் கொடுத்தது என் காதோரம் வளர்ந்த நரையை...... என் சுமையை இறக்கி நீ உன் தோளில் ஏற்றிக்கொண்ட போது என் கண்களில் வழிந்தோடியது ஆனந்த கண்ணீர்........ இனியொரு ஜென்மம் வேண்டியதில்லை நான் உன் மகனாய் பிறந்திட........ இப்போழுதே உன் குழந்தை நானாக நீ என் தகப்பன் ஆனாய்.......
Image
அவனதிகாரம் கனவிலும் கண்டதில்லை அவனைப்போல் ஓர் ஆண்மகனை..... காதலிக்க வாய்ப்பில்லை ஆண்களின் மீது நாட்டமில்லை...... இருந்தும் ஒரு உந்துதல் அவனுடன் பேசி பழக......... காலங்கள் கடந்து சென்றதாம் காதலில் விழுந்தேனாம்........ இருமாப்பாய் இருந்தவளை அவன் அன்பினால் தகர்த்தெரிந்தான்...... சந்திக்க ஆசைப்பட்டு தனிமையில் காத்திருந்தேன்........ அவன் விழி பேசும் காதல் மொழியில் திக்கற்று  தான் போனேனோ...... இதழ்கள் இரண்டும் கலந்தாட வெட்கம் எனை ஆட்கொள்ள...... என் வெட்கத்தை ரசித்தவாறே எடுத்துறைத்தான் தன் காதலை........ காதலில் கரைந்து கலவியில் மூழ்கித்தான் போனோம்..... அவனுடனான அந்நொடி என் வாழ்வின் உயிர்நாடி......... சத்தமிட்டு சொல்வேனடா முரணாய் உன் காதோரத்தில்..... இன்னும் இன்னும் உனை அதிகமாய் காதலிக்கிறேன் என்று......
Image
ஒரு கன்னியின் கண்ணீர் மடல் தொலைதூர நடை பயனம் வழித்துணையாய் அவன் வந்தான்..... விழியோடு விழி பார்க்க மௌனம் மட்டும் மொழியாக..... இரு கரம் கோர்க்க ஆசைப்பட்டு வெட்கம்தனில் முகம் சிவக்க..... என் வெட்கம்தனை புரிந்துகொண்டு அழகாய் அவன் கரம் நீட்ட..... காத்திருந்த காலமெல்லாம் கண்முன்னே வந்து போக....... இதைவிட ஒரு சொர்க்கம் உண்டா என நினைத்து நினைத்து மனம் ஏங்க..... ஏக்கத்தில் நின்றவளை  ஏறெடுத்தும் பார்க்காமல் விட்டுச் சென்றதேனோ..... என் கனவெல்லாம் கண்ணீராய் கரைந்தோட...... இன்றும் காத்திருக்கிறேன் அதே இடத்தில் அழைத்துச்செல்ல நீ வருவாய் என......
Image
என் வெட்கம் அழகுதான் உன்னால் உண்டாகும் என் வெட்கம் அழகுதான்...... உன்னுடன் இருக்கும் நொடி என் வெட்கம் அழகுதான்...... உன் விரல் தீண்டும் போது என் வெட்கம் அழகுதான்.... உன் ஸ்பரிசம் மோதும் போது என் வெட்கம் அழகுதான்.....
Image
தந்தைக்கு பரிசு பத்துத் திங்கள் காத்திருப்பை அனுவனுவாய் கடந்து வந்தாய் உன் உயிரில் கருவானவளாம் உன் மகளின் வரவுக்காக....... இரவெல்லாம் தூங்காமல் இமைரெண்டும் மூடாமல் கண்விழித்து கண்டு ரசித்தாய் என் செல்ல சினுங்கள்கள் ஒன்வொன்றையும்......... உன் விரல் பிடுத்து நடைப்பழகி உன் முதுகில் யானைச்சாவாரி என உன் மடியில் தவழ்ந்தாடிய காலங்கள் இன்னும் எம் சிந்தையில்.......... பள்ளி முடியும் வேலைகளில் எல்லாம் அரைமணி முன்னதாகவே வந்து காத்திருப்பாய் ஆசைமகள் அரையடி கூட நடக்கக்கூடாது என..... பூப்பெய்து நின்றவளை புன்முறுவலுடன் நீ பார்க்க வெட்க்கத்தில் நான் விரல்தாங்கி விழி மூட உன் முகத்தில் கண்டேன் நெகிழ்ச்சியின் உச்சத்தை..... பட்டம் வாங்கி வந்தவளை நீ கட்டி அணைத்து முத்தமிட்ட அந்நொடியில் உணர்ந்து கொண்டேன் நான் வளர்ந்து விட்டேன் என்பதை....... வளர்ந்த மகளுக்கு வரன் பார்த்து உன் கரம் பற்றி வளர்ந்தவளை மறு கரம் மாற்றி குடுக்கையில் உன் விழியோரம் மழைத்துளி....... மழை நின்ற போதிலும் மனம் நின்ற பாடில்லை மீண்டும் உன் கரம் பற்ற உனக்கே பரிசளிப்பேன் என் செல்ல மகளை.........